ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று (ஆக. 03) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

author img

By

Published : Aug 3, 2021, 9:54 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஆக. 03) தொடங்கியது.

108 வைணவத் தலங்களில் மிக முக்கியமான ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலாகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஸ்ரீஆண்டாள் பெரியாழ்வாரின் பிள்ளையாக பூமியில் அவதரித்தார் என நம்பப்படுகிறது.

ஆண்டாள், மானிடப் பெண்ணாக பிறந்து பூ மாலை சூட்டி, பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா, மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடியேற்றத்துடன் தொடக்கம்

கரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழ்நாட்டின் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை பக்தர்களுக்கு திருக்கோயிலில் அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பக்தர்கள் யாரும் இன்று கோயிலுக்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பட்டாச்சார்யர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில், அலுவலக ஊழியர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சென்ற ஆண்டுபோல் இந்த ஆண்டும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நிகழ்வுகள்

இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர விழாவில்,

  • ஐந்தாம் திருநாள் 7ஆம் தேதியும்,
  • கருட சேவை 9ஆம் தேதியும் நடைபெறும்.
  • முக்கிய நிகழ்வான திரு ஆடிப்பூரத் தேரோட்டம் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

சென்ற ஆண்டுபோல் இந்த ஆண்டும் கோயில் பிரகாரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.

இதையும் படிங்க: 'ஆடி 18ஆம் பெருக்கில் வெறிச்சோடிய ஒகேனக்கல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.