விருதுநகர் சாமியார் கிணறு தெருவை சேர்ந்த பரணிதரன். இவர் விருதுநகர்-மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இவரது இருசக்கர வாகனத்திற்குள் புகுந்தது.
இதையறிந்த பரணிதரன் அலறியடித்துக்கொண்டு வண்டியை அப்படியே கீழே விட்டுவிட்டு, விருதுநகர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு இருசக்கர வாகன பழுது பார்ப்பவர் உதவியுடன் வாகனத்தை பிரித்து அதனுள் இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பைப் பிடித்தனர்.
இது குறித்துப் பேசிய தீயணைப்புத் துறை ஆய்வாளர் முருகேசன், அந்த பாம்பை உசிலம்பட்டி பகுதியில் உள்ள காட்டிற்குள் விடப்போவதாக தெரிவித்தார்.