ETV Bharat / state

மூலிகை பெட்ரோல்: கேரள தனியார் நிறுவனத்துடன் ராமர் பிள்ளை ஒப்பந்தம்! - herbal fuel man Ramar Pillai

விருதுநகர்: மூலிகை பெட்ரோல் தயாரிக்க கேரள மாநிலத்தின் தனியார் நிறுவனத்துடன் ராமர் பிள்ளை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ராமர் பிள்ளை
ராமர் பிள்ளை
author img

By

Published : Sep 9, 2020, 4:50 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. கடந்த 1994ஆம் ஆண்டு இவர் தயாரித்து வெளியிட்ட மூலிகை பெட்ரோல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மூலிகை பெட்ரோல் அல்ல என்று சிபிஐ கடந்து 2000ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தது. அண்மையில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய ராமர் பிள்ளை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிறுவனம் கேரள அரசின் ஒப்புதல் பெற்று 77 இடங்களில் இயங்கி வருகிறது. மேலும், மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான மூலிகையை பயிரிட ஆயிரத்து 200 ஏக்கரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ஆம் தேதி உற்பத்தி தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

தற்போது 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான மூலிகைப் பொருள்கள் இருப்பதாகவும், அதில் 100 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்து இந்திய ராணுவத்திற்கு கொடுக்கப்படும் என ராமர் பிள்ளை தெரிவித்தார். ஒரு லிட்டர் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராமர் பிள்ளை பேசிய காணொலி

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூர் முஹம்மது பல்கலைக்கழகத்தின் மூலம் பெட்ரோல் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் ராமர் பிள்ளை மேற்பார்வையில் மூலிகைப் பெட்ரோல் விற்பனை செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மூலிகை பெட்ரோலுக்கு தமிழ் தேவி மூலிகை எரிபொருள் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் ரூபாய் 20க்கு விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ரூ.30க்கு, 80 கி.மீ. பயணம் - விரைவில் வருகிறது ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.