ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்! - அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்

விருதுநகர்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

Ministers
Ministers
author img

By

Published : Jun 13, 2021, 2:23 AM IST

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

இதன் பின் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், “கரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால், தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உயிர்காக்கும் பொருட்டு, உயிர் காக்க தேவையான ஆக்சிஜன் வெளி மாநிலங்கள், வெளிநாட்டிலிருந்தும், புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பதன் மூலமும் தங்கு தடையின்றி ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவமனையில், தமிழ்நாட்டில் முதன் முறையாக பிரதமரின் குடிமக்களுக்கான அவசரகால உதவி மற்றும் நிவாரண நிதியின் (PM CARES - Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situation Fund) கீழ், மத்திய ராணுவ அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ரூ.97.40 இலட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உற்பத்தி மையத்திற்கான சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் கட்டுமான பணிகளை மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்துள்ளது. இதன் மூலம் நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் வார்டுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் மூலம் பிராண வாயு கரோனா நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து கிடைப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 150 முதல் 200 நோயாளிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார். அதன் பின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை விரைவாக பொருத்தி, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவிய பொறியாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.