ETV Bharat / state

’ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவரும் ஐஐடி’ - கி.வீரமணி குற்றச்சாட்டு - Fatima Latif

விருதுநகர்: ஐஐடி தற்போது ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவருகிறது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

veeramani
author img

By

Published : Nov 16, 2019, 3:53 PM IST

விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டில் கலந்துகொண்ட திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”காமராஜர் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது நீட் என்ற தேர்வை கொண்டு வந்து பல உயிர்பலிகள் நடந்துள்ளன. கலைஞர் ஆட்சியில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள ம௫த்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் படிக்கும் சூழல் உருவாகியுள்ளது, இதில் ஆள் மாறாட்டம் வேறு நடைபெறுகிறது. நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வள்ளுவருக்கு எந்த மதமோ, ஜாதியோ, இனமோ இல்லை, அவருக்கு சாயம் பூசி மதம் பிடிக்க வைக்கக்கூடாது. ஐஐடி தற்போது ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவருகிறது என குற்றஞ்சாட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் கீ.வீரமணி

மேலும், தாழ்த்தப்பட்டவர்களை புறந்தள்ளுகிறார்கள், ஒதுக்கி வைக்கிறார்கள் தமிழ்நாட்டிற்கே இது அவமானம், பேராசிரியரை நீக்கம்செய்வது மட்டுமின்றி சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். மாணவி பாத்திமா தற்கொலை குறித்த விசாரணை நேர்மையாக நடக்கும் என தாம் நம்புவதாகவும் வீரமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’பாத்திமாவின் தற்கொலைக்கு மத ரீதியான தாக்குதலே காரணம்’

Intro:விருதுநகர்
16-11-19

ஐஐடி தற்போது ஐய்யர், ஐயங்கார் இன்ஸ்டிடியூட் ஆக மாறி வருகிறது - திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

Tn_vnr_03_ki_veeramani_vis_byte_script_7204885Body:பகுத்தறிவை வளர்ப்பதற்கு கல்வி முக்கியமானது. இன்றைய தேர்வு முறையால் மாணவர்களும்,பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ளனர். ஐஐடி மாணவி பாத்திமாவின் இறப்பு குறித்த விசாரணை முறையாக நடக்கும் என தாம் நம்புகிறோம்- வி௫துநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் பொன் விழா மாநாட்டில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 1970 ல் பெரியார் பகுத்தறிவாளர் கழகத்தை தொடங்கி இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் பிரிவு 51A வில் சொல்லப்பட்டுள்ளது போல் மக்கள் அறிவியல் மனப்பான்மை வளர்த்தல், கேள்வி கேட்டுக்கும் திறனை மேம்படுத்துதல் மனித நேயத்தை வளர்த்தல் மற்றும் சீர்திருத்தம் ஊக்கப்படுத்துதல் போன்றவற்றை அறிந்து கொள்ளும் விதமாக இயக்கத்தை வழிநடத்தினார். பகுத்தறிவாளர் கழகத்தின் 2 வது மாநாடு வி௫துநகரில் நடைபெற்றதை போல் பொன்விழா மாநாட்டையும் இங்கு நடத்துவதாக குறிப்பிட்டார். காமராஜர் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது நீட் தேர்வு என்ற தேர்வை கொண்டு வந்து பல உயிர்பலிகள் நடந்துள்ளன. கலைஞர் ஆட்சியில் ஏராளமான மருத்துவகல்லூரி துவக்கப்பட்டது, இன்று நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள ம௫த்துவ கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர் அதிகம் பேர் உள்ளனர், இதில் ஆள் மாறாட்டம் வேறு நடைபெறுகிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும். தமிழக அரசு நீட் தேர்வில் இரட்டை வேடம் போடுகிறது. வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி திட்டம் தான் என்பது போல செயல்படுகிறது. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக தமிழக அரசு அதை முன்கூட்டியே முந்தி நின்று செயல்படுத்துகிறது என்றார். 5,8,10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு தேர்வு மேலும் பல நுழைவுத்தேர்வு இப்படி பல தேர்வுகளை சந்திப்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்தார். வள்ளுவருக்கு எந்த மதமோ, ஜாதியோ, இனமோ இல்லை, திருவள்ளுவருக்கு சாயம் பூசி திருவள்ளூவருக்கு மதம் பிடிக்க வைக்க கூடாது. ஐஐடியில் இட ஒதுக்கீடு இல்லை, ஐய்யர், ஐயங்கார் இன்ஸ்டிடியூட் ஆக மாறி வருகிறது, தாழ்த்தப்பட்டவர்களை புறந்தள்ளுகிறார்கள்,ஒதுக்கி வைக்கிறார்கள் தமிழ்நாட்டிற்கே இது அவமானம், பேராசிரியரை நீக்கம்செய்வது மட்டுமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாணவி பாத்திமா தற்கொலை குறித்த விசாரணை நேர்மையாக நடக்கும் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.