விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் முன்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடபட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வின் போது யானை தந்தத்தால் ஆன அணிகலன் மற்றும் சுடு மண்ணால் செய்யப்பட்ட அணிகலனும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கு நடக்கும் அகழாய்வு பணியின் போது பல்வேறு அரிய பொருட்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ‘எங்களுக்கு புரியும் தமிழில் மந்திரங்கள் உள்ள போது சமஸ்கிருதம் எதற்கு..?’ - அன்பில் மகேஷ் கேள்வி