ETV Bharat / state

மோடி கார்ப்ரேட் கைக்கூலியா? - ராஜேந்திர பாலாஜி விளக்கம் - கார்ப்ரேட்

விருதுநகர்: தொழிற்சாலைகள் வந்தால் சாதி மத, இன போதமின்றி மக்கள் ஒன்றிணைந்து பணிபுரிவார்கள் எனப் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Apr 10, 2019, 5:19 PM IST

விருதுநகரில் அதிமுக கட்சியின் மக்களவைத் தேர்தல் அலுவலகத்தைப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து கடவுள்களை திமுக, திக கட்சிகள் அவதூறாகத் தொடர்ந்து பேசி வருகின்றனர். எனவே அவர்கள் இந்துக்களின் விரோதி என்றும் கடுமையாகச் சாடினார். மேலும், தினகரன் அணியிலிருந்து அதிமுகவிற்கு வரும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றும், குண்டர்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்த அவர் தினகரன் அணியினர் அதிமுக கரை வேஷ்டி கட்டாமல் இருக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஆணியையும் பிடுங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர், வினை விதைத்தால் வினைதான் கிடைக்கும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலினைப் போல் அவரது மகனும் அவதூறாகப் பேசிவருகிறார் என விமர்சித்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்ற பின்னர் தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவப் படையினர் கைது செய்தால், அவர்கள் நிம்மதி இழக்கும் வகையில் கடலோர எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் நிலை நிறுத்தப்படும் என அழுத்தமாகத் தெரிவித்தார். மோடி புதிய தொழிற்சாலைகள் கொண்டுவந்தால் அவரைக் கார்ப்பரேட் நிறுவனத்தின் கைக்கூலி என்று கூறுவதா? புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால்தான் அனைத்து சாதி இன மக்களும் ஒன்றிணைந்து சாதி, இன, மத பேதமின்றி பணிபுரிவார்கள் என்றும் கலவரங்கள் தடுக்கப்படும் என்றார்.

Intro:விருதுநகர்
10-04-19

Body:விருதுநகர் அதிமுக கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார் அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர் பெரியகுளம் கதிர்காமு மீது எழுந்துள்ள குற்றச்சாட்டே சான்று என்றார். தொடர்ந்து பேசியவர் தினகரன் அணியிலிருந்து அதிமுகவிற்கு வரும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள் குண்டர்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் இந்து கடவுள்களை திமுக மற்றும் திக கட்சிகள் அவதூறாக தொடர்ந்து பேசி வருகின்றனர் அவர்கள் இந்துக்களின் விரோதி என்றும் அதிமுகவிற்கும் தினகரனுக்கும் சம்பந்தமில்லை தேர்தலுக்குப் பின் தினகரன் அணியினர் அதிமுக கரை வேஷ்டி பயன்படுத்தாமல் இருக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஆணியையும் புடுங்கவில்லை என்று அவதூறாகப் பேசியதற்கு பதில் கூறிய அமைச்சர் பனை விதைத்தால் பனைதான் முளைக்கும் ஸ்டாலின் போல அவரது மகனும் அவதூறாக பேசி வருகிறார் என்றார். மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்ற பின்பு இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை கைது செய்தால் இலங்கை இராணுவம் நிம்மதி இழக்கும் இந்திய கடலோர எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் நிறுத்தப்படும். மோடி புதிய தொழிற்சாலைகள் கொண்டுவந்தால் கார்ப்பரேட் நிறுவனத்தின் கைக்கூலி என்று கூறுவதா? புதிய தொழிற் சாலை அமைக்கப்பட்டால் தான் அனைத்து சாதி இன மக்களும் ஒன்றிணைந்து ஜாதி இன மத பேதமின்றி பணிபுரிவார்கள் கலவரங்கள் தடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.