ETV Bharat / state

234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல்- அர்ஜுன் சம்பத் - விருதுநகர் செய்திகள்

விருதுநகர்: 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக அர்ஜுன் சம்பத் மீண்டும் அறிவித்துள்ளார்.

indhu munnani party
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
author img

By

Published : Mar 5, 2021, 10:17 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலில், இந்து மக்கள் கட்சி சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களிடம் விருப்ப மனு பெறுவதற்கு, விருதுநகர் வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், விருதுநகர் பாண்டியன் நகரிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு 7 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விருப்ப மனுவை அவரிடம் வழங்கினர்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்து மக்கள் கட்சி சார்பாக 234 தொகுதியிலும் ஆன்மிக அரசியலை வலியுறுத்தி இந்து மக்களின் நலனுக்காக குரல் கொடுக்க, இந்து மக்கள் கட்சி சார்பாக முடிவு செய்திருக்கிறோம்.

இந்து ஓட்டு பிளவுப்படாமல் இருக்க, இந்து ஓட்டு வங்கியை உருவாக்கிட அதிமுக, பாஜக உடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். தேர்தல்களில் இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது போல் இந்து அமைப்பிற்க்கும் வாய்ப்பும், அரசியல் அங்கீகாரமும் வழங்க வேண்டும்.

தேர்தலின் போது கிறிஸ்துவ தேவாலய வழிபாடு என்று அரசியல் பரப்புரை செய்கின்றனர். மசூதிகளில் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென மதக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இது தேர்தல் விதியை மீறிய செயல். மதத்தின் பெயரில் வாக்களிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துபவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம். பாஜகவை வலுப்படுத்தவே இந்து ஓட்டு வங்கியை உருவாக்க இருக்கின்றோம். வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதிலும் முறியடிப்பதில் கிறிஸ்துவ அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை திமுக எதிர்க்கிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள் காரணமல்ல, ஸ்டாலின் தான் காரணம். திமுக பாகிஸ்தானுடன், சீனாவுடன் கூட்டணி வைத்து உள்ளது. தேர்தலை முறையாக நடத்த விடக்கூடாது என ஸ்டாலின் இஸ்லாமிய அமைப்புகள் உடன் இனைந்து முயற்சிக்கின்றார்.

சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் தேச விரோத அமைப்பு, இந்திய விரோத அமைப்பு மற்றும் நக்சலைட்டுகள் வேலை பார்க்கின்றனர். அவற்றை எதிர்க்கவும், முறியடிக்கவும் நாங்கள் உள்ளோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலை -கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.