விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் சுமார் ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட இடங்களில் கொய்யா சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கொய்யா பழத்தின் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழையால் கொய்யா பழத்தில் புது வகையான அம்மை நோய், ஈரல் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கொய்யா பழ விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு மிகுந்த பாதிப்பு அடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான கொய்யா பழத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிணற்றுக்குள் விழுந்த மூன்று காளைகளை அடுத்தடுத்து மீட்ட தீயணைப்புத் துறையினர்!