ETV Bharat / state

இறந்து போன மனைவியின் உடலை கேட்கும் கணவர் - request wife body

விருதுநகர்: மலேசியாவில் இறந்து போன தன்னுடைய மனைவியின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் கணவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மனைவி ரேவதி
author img

By

Published : Jul 31, 2019, 9:32 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சில்லையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (56). பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்துவருகிறார். இவரது மனைவி ரேவதி(48) குடும்ப சூழ்நிலை காரணமாக 27.09.2018 அன்று மலேசியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்றார். கடந்த 10 மாதங்களாக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேவதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்து போன மனைவியின் உடலை கேட்கும் கணவன்...

ரேவதி உயிரிழந்த தகவல் மலேசியாவில் உள்ள ஏஜெண்ட் ஜான் என்பவர் மூலம் கணவர் கணேசனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வறுமையில் வாடும் கணேசனால் மலேசியாவில் இறந்த மனைவியின் உடலை பார்க்க செல்ல முடியாத நிலையில் உள்ளார். எனவே இறந்து போன தனது மனைவியை பார்க்க வேண்டும், ஈமக் காரியம் செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும், எனவே தமிழ்நாடு அரசு எனது மனைவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர உதவி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Intro:விருதுநகர்
31-7-19

இறந்து போன மனைவியின் உடலை மலேசியாவில் இருந்து மீட்டு தர கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்த கூலித் தொழிலாளி
Body:மலேசியாவில் இறந்து போன தன்னுடைய மனைவியின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும் என பட்டாசு தொழிலாளியான கணேசன் தமிழக அரசுக்கு கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சில்லையநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (56). கணேசன் அருகில் உள்ள பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். கணேசனுக்கு ரேவதி (48)என்ற மனைவியும் விஜயலட்சுமி (22) என்ற மகளும் மற்றும் விக்னேஷ் (25) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணேசனின் மனைவி ரேவதி குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு 27.09.2018 அன்று மலேசியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்றார். கடந்த 10 மாதம் காலமாக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார் . இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேவதிக்கு உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் என்ற தகவல் மலேசியாவில் உள்ள ஏஜெண்ட் ஜான் என்பவர் மூலம் கணேசனுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை கேட்டு கணேசன் குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் வறுமையில் வாடும் என்னால் மலேசியாவில் இறந்த எனது மனைவியின் உடலை பார்க்க செல்ல முடியாத நிலையில் உள்ளேன். எனவே இறந்து போன எனது மனைவி ரேவதியின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவரவும் . நான் எனது மனைவிக்காக ஈமக் காரியம் செய்து நல்லடக்கம் செய்ய தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினருக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.