ETV Bharat / state

மாட்டுத்தீவனம் எடுத்துவரச் சொன்னதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கணவன்! - குற்ற செய்தி

விருதுநகர்: மாடுகளுக்குத் தீவனம் எடுத்துவர மனைவி கூறியதால் மனமுடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Virudhunagar latest news
Virudhunagar latest news
author img

By

Published : Feb 14, 2020, 10:59 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த கோமதி - முருகன் தம்பதிக்கு, சிவா, பாண்டிமுனீஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சிவா கொத்தனார் வேலையும் பாண்டிமுனீஸ்வரன் மின்வாரியத்திலும் வேலை பார்த்துவருகின்றனர். ஆனால், முருகன் குடித்துவிட்டு எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் இருந்துவந்துள்ளார்.

இளைய மகன் பாண்டிமுனீஸ்வரனும் கடந்த சில நாள்களாகப் பணிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கோமதி தனது கணவர் முருகனிடம் மாட்டுக்குத் தீவனம் எடுத்துவரச் சொல்லிவிட்டு தொழுவத்திற்குச் சென்றுள்ளார்.

மாட்டுத் தீவனம் எடுத்துவர சொன்னதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கணவன்!

தன்னை மாட்டுத்தீவனம் எடுத்து வர மனைவி சொன்னதால் மனமுடைந்து முருகன் விஷமருந்தி வீட்டுக்குள் மயங்கினார். அதேபோல் இளைய மகன் பாண்டிமுனீஸ்வரனும் விஷம் அருந்தியுள்ளார். இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் வீட்டுக்கு வந்த கோமதி கணவனையும் மகனையும் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

முருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், இளைய மகன் பாண்டிமுனீஸ்வரன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மம்சாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:கண்ணாம்பூச்சி விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.