விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த குட்லக் என்ற மாரிச்செல்வம் கஞ்சா போதையில் காவல் நிலையத்திற்குள் புகுந்துள்ளார்.
பேண்ட் மட்டும் அணிந்து சட்டை கூட போடாமல் அரை நிர்வாண உடையில் புகுந்த போதை ஆசாமி அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உட்பட காவலர்களை தரக்குறைவாகவும் ஆபாச வார்த்தைகளாலும் பேசியுள்ளார்.
ஆனால் போதை ஆசாமி மீது காவலர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கி மௌனம் காத்துள்ளனர். பின்னர் அவரது அம்மாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை அழைத்துச் செல்ல கூறியுள்ளனர்.
பின்னர் அவர் வந்தவுடன் அவரிடம் அனுப்பி வைத்துள்ளனர். போதை ஆசாமி காவலர்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம்.. ஆசிரியர்கள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி