ETV Bharat / state

தீபாவளி 2019 - சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நிலையும் பட்டாசு விற்பனையும்!

தீபாவளி நெருங்கிவரும் வேளையில் பட்டாசு உற்பத்தி, விற்பனை, பட்டாசு தொழிலாளர்கள் நிலை குறித்த சிறப்புத் தொகுப்பு...

Diwali 2019 - crackers sale and labourers situation
author img

By

Published : Oct 21, 2019, 11:42 AM IST

பட்டாசு உற்பத்தி குறைவால் விலை உயர்வு - தொழிலாளர்கள் நிலை

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உபதொழில்கள் மூலமும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. ஆனால் பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் பேரியத்துக்கும், சரவெடி தயாரிப்பதற்கும் தடை விதித்தது. இனி அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக கடந்த தீபாவளிக்குப் பிறகு சிவகாசியில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகள் 3 மாதங்கள் மூடப்பட்டன. இதனால் இந்த ஆண்டு 40 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது.

இதுகுறித்து பட்டாசு விற்பனை செய்துவரும் சாந்தி மாரியப்பன் கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகளை விட இந்த ஆண்டு 50 சதவீதத்திற்கு குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் பருவ மழையின் காரணமாக அதிலும் 10 சதவிகிதம் குறைவு ஏற்பட்டு தற்போது 40 சதவிகிதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பட்டாசு உற்பத்தி என்பது இந்த ஆண்டு பற்றாக்குறையான அளவிலேயே உள்ளது இதற்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நீதிமன்ற பிரச்னைகள் காரணமாக பட்டாசு தொழிலாளர்கள் பலர் திருப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்ந்துவிட்டனர். அதன் காரணமாக பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மிகுந்த அளவில் இந்த ஆண்டு இருந்துவருகிறது. இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி என்பது தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடும் அளவில் இல்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார். இதுபோக விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்துவரும் மழையின் காரணமாகவும் பட்டாசு தொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கடை உரிமையாளர் குமார் கூறும்போது, ‘கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த ஆண்டு சந்தையில் வாடிக்கையாளர் கூட்டம் குறைவாகவே உள்ளது. இதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தாமதமாகவே உற்பத்தி தொடங்கப்பட்டது. அதனால் விற்பனையும் தாமதமாகவே தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டைவிட 3 முதல் 5 சதவீதம் பட்டாசு விற்பனை விலை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் பட்டாசு விலையேற்றம் குறித்த விளக்கங்கள் அளித்த பின்பும் அவர்களிடம் சற்று அதிருப்தி நிலவி வருகிறது’ என தெரிவித்தார்.

கிஃப்ட் பாக்ஸ் விலை உயர்வு

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு வித விதமான கிஃப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தீபாவளியன்று நம் வீட்டிற்கு வரும் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு இனிப்பு பலகாரம் சோ்த்து பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் கொடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வணிக நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸுடன் சோ்த்து கிஃப்ட் பாக்ஸ் கொடுப்பது வழக்கமாகி வருகிறது. அதேபோல் கிராமங்களில் தீபாவளி சீட்டு நடத்துபவா்கள் தங்களுடைய வாடிக்கையாளா்களுக்கும், ஜவுளி கடைகளில் அதிக அளவில் துணி எடுக்கும் வாடிக்கையாளா்களுக்கும் பட்டாசு பரிசு பெட்டி கொடுக்கின்றனா். சாலையோர பட்டாசு கடைகளில் லாரி டிரைவா்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்றுவரும் வெளி மாநிலத்தவா்கள் என அதிக அளவில் இந்த பரிசு பெட்டி வாங்கிச் செல்கின்றனர்.

மேலும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தீபாவளி பரிசாகவும் இந்த பரிசு பெட்டி கொடுக்கின்றனா். இந்த பரிசு பெட்டி ரூபாய் 175 முதல் ரூபாய் 1200 வரை பட்டாசு கடைகளில் கிடைக்கின்றது. மேலும் ரூபாய் 500 வரை உள்ள பரிசு பெட்டி முற்றிலும் குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுகின்றன. 575 ரூபாய் மதிப்புள்ள பரிசு பெட்டியில் 40 வகையான பட்டாசுகள் இடம்பெற்றிருக்கும் இது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பட்டாசுகளும் இருக்கும். இந்த பரிசுப் பெட்டியில் விலைக்கு ஏற்ப பட்டாசு வகைகள் வைக்கப்படுகின்றன. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் பரிசு பெட்டி தயாரிக்கப்படுகின்றன அதே சமயம் இந்த பரிசு பெட்டி விலையும் 5 முதல் 10 சதவீதம் விலை உயா்ந்துள்ளது.

புதியதாகக் களமிறங்கியுள்ள பட்டாசுகள்

தீபாவளி பண்டிகை என்றதும் நினைவுக்கு வருவது புத்தம் புது ஆடைகள், பலகாரம், பட்டாசுடன் கொண்டாட்டம். தீபாவளியின் முதல் அடையாளமே பட்டாசுகள் என்றால் மிகையாகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையுடன் வெடித்து மகிழும் பட்டாசுகள் இந்தியாவிலேயே அதிக அளவில் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலைகளும், அதில் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளா்களும் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகியுள்ளன. அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு முதல் டிக் டாக் வரை பல்வேறு விதமான புதிய பட்டாசுகள் சந்தையில் களமிறங்கியுள்ளன. அதில் குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து அதிகம் கவரும் வகையில் நிறைய பட்டாசு வகைகளை விற்பனைக்கு வந்துள்ளன. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை குறிப்பிடும் பட்டாசு, சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது மொபைல் போனில் விளையாடும் விளையாட்டுகளான Temple run, clash of clans, angry Bird போன்ற வீடியோ கேம்கள். பிரபல சமூக வலைத்தளங்களான Twitter, Skype மற்றும் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களான கும்கி, பாகுபலி, Wonder park, Tarzan, cars என ஏராளமான புதிய ரக பட்டாசுகள் சந்தையில் களமிறங்கியுள்ளன. மேலும், COLORS RAIN - MAGIC PEACOCK - MAX100 FLAME GUN - TRI COLOUR FOUNTAIN – SINGPOP - IFOX STAR ஆகியவை குறிப்பிடத்தக்க புதிய ரக பட்டாசு வகைகள் ஆகும். இந்தியாவிலேயே முதல் முறையாக 75 நொடிகள் வெடிக்கக்கூடிய BIGGEST INDIAN FOUNTAIN என்ற புதிய வகை பட்டாசும் இந்த ஆண்டு புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளது.

பசுமை பட்டாசுகள் விற்பனை

‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி 2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்தாண்டு அக்.23ஆம் (2018) தேதி இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், பட்டாசு தயாரிக்க 'பேரியம்' பயன்படுத்தக் கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்கக் கூடாது என்றும், புகை, சப்தம் குறைந்த அளவுள்ள பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால், வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தியைத் தொடர முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர். மேலும், பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதற்கான விளக்கம் இல்லாததால் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

பசுமை பட்டாசுகள் விற்பனை

கடந்த மார்ச் மாதம் ‘நீரி’(NEERI) எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வக நிபுணர்கள், சிவகாசியில் பசுமை பட்டாசுக்கான புதிய பார்முலாவை ஆய்வு செய்து பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 'பேரியம் நைட்ரேட்' (BARIUM NITRATE) அளவைக் குறைத்து அதற்கு மாற்றாக 'ஜியோலைட்'(ZEOLITE) உள்ளிட்ட சில ரசாயனக் கலவைகளை சேர்க்கும் புதிய பார்முலாவை வழங்கினர்.

அதைக் கொண்டு கடந்த ஏப்ரல் முதல் பசுமை பட்டாசு தயாரிக்கும் பணி சிவகாசி ஆலைகளில் தொடங்கின. தற்போது தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர் கணேஷ் குமார் கூறும்போது, பசுமை பட்டாசு இந்த தீபாவளிக்கு குறைவான அளவிலேயே சந்தைக்கு வந்துள்ளது. அடுத்தாண்டு தீபாவளி முதல் பசுமை பட்டாசு முழுமையாக சந்தைப்படுத்தப்படும் என்றார்.

பட்டாசு கடை உரிமையாளர் சாந்தி கூறும்போது, பசுமை பட்டாசு கூடிய விரைவில் சிவகாசி முழுமையும் வந்தடையும். அந்தப் பசுமை பட்டாசு, தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக முழுமையான உற்பத்தி நடைபெற்றால் அனைவரும் வரவேற்போம்.கடந்த ஆண்டும், இந்தாண்டும் பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஒதுக்கியிருப்பது சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் வழங்க வேண்டும். அரசு இந்த தொழிலுக்கு பல்வேறு வகையான புதுமைகளை புகுத்தி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவை தொழிலாளர்களை இணைத்து கொண்டுவர வேண்டும். அப்போது தான் அனைவரும் தீபாவளியை நல்ல முறையில் கொண்டாட முடியும் என்றார்.

பசுமை பட்டாசு - உலாவும் போலி ஸ்டிக்கர்

பசுமை பட்டாசு - உலாவும் போலி ஸ்டிக்கர்

பசுமை பட்டாசு என்று கூறி ஸ்டிக்கர் மட்டும் ஒட்டி ஏமாற்றுவதாக சில வியாபாரிகள் கூறுகின்றனர். பசுமை பட்டாசை அடையாளம் காணும் வகையில் அதில் தனி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பட்டாசுகளும் சந்தைக்கு வருகிறது. ஸ்டிக்கரில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் (QR Code scanning) செய்தால் உண்மையான பசுமை பட்டாசு எது, போலியானது எது என தெரிந்துவிடும் என தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (NEERI) தெரிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.