விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மீ. மருதுபாண்டியன். இவர், மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவராக உள்ளார். இவர், தனது குழந்தைகள் அதியன் மற்றும் ஐயை ஆதிரை ஆகியோருக்கு இன்று (மே 14) காதணி விழா நடத்தினார்.
இந்த விழாவிற்கு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவ்விழாவிற்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள், அரசு அலுவலர்கள் அனைவருக்கும் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட 'கீழடி' நூலை இலவசமாக வழங்கினார்.
இந்த நூலை மேடையில் வைத்து ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து குழந்தைகள், பெரியவர்கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் வழங்கியதோடு, தமிழர்களின் புகழ்பெற்ற பண்டைய நகர நாகரிகமான கீழடி குறித்தும் மேடையில் விளக்கம் அளித்தார்.
விழாவுக்கு வந்திருந்த விருந்திநர்கள் அனைவரும் தங்கள் கையோடு கீழடி நூலை கொண்டு சென்றது அந்த கிராமத்தில் வியப்புக்குரிய காட்சியாக இருந்தது.
இதையும் படிங்க: பாஜக சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டி - பவுலிங் செய்த நமீதா; ரசிகனாக மாறி ஆர்ப்பரித்த தொண்டர்கள்!