சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமனை ஆதரித்து இன்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம் பண்ணை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும், தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கபடும். தற்போது நடைபெறும் ஆட்சி ஊழலாட்சி. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையில் சுமார் 6,300 கோடிகளுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் ஆளுநரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆட்சி மாற்றம் நடந்ததும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்களும், ஊழல் செய்தவர்களும் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியாது” என்றார்.
இதையும் படிங்க: ஆனைமலை தனியார் விடுதியில் பணப் பட்டுவாடா?