விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தனியார் பள்ளி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவமுருகலிங்கம் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நூற்பாலையில் பணிபுரியும் ஜெயரங்கா என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.88,350 பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர் உதயகுமாருக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு பணம்? காணொலி வைரல்