விருதுநகர்: பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து ஐந்து நாள்களே ஆன நிலையில் அரசு மருத்துவமனை இன்று (மார்ச் 29) எதிர்பாராதவிதமாக கட்டில் உடைந்து கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தையின் தலையில் பலத்த காயம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குழந்தையை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மருத்துவர் அரவிந்த் பாபு தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் பேருந்தில் ஆபத்தான பயணம்