விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்றிரவு தேநீர் அருந்த சென்ற பத்திரிகையாளரை அடையாளம் தெரியாத நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தவரை அப்பகுதி மக்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
அதில் தாக்கப்பட்டவர் ஹவுசிங்போர்டு பகுதியில் வசிக்கும் கார்த்திக்(46) என்பதும், தனியார் இதழில் விருதுநகர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர் சில நாட்களுக்கு முன்பு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பற்றியும் சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகிய இருவர்களுக்கிடையே நிகழும் உட்கட்சி பூசல் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என சந்தேகங்கள் நிலவி வருகிறது.
இதையும் படிங்க:நூதன முறையில் பணமோசடி: நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர் புகார்!