ETV Bharat / state

'கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்' - அதிமுக பிரமுகர் மிரட்டல் பேச்சு - அதிமுக கூட்டத்தில் மிரட்டல் பேச்சு

'அதிமுகவில் நின்னு ஜெயித்துவிட்டு, மற்ற கட்சிக்கு மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்' என சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சண்முக கனியின் மிரட்டல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டல் பேச்சு
மிரட்டல் பேச்சு
author img

By

Published : Feb 2, 2022, 9:57 PM IST

விருதுநகர்: சாத்தூரில் ஜனவரி 27ஆம் தேதி சாத்தூர் நகர மன்றத் தேர்தலுக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சண்முககனி பேசினார்.

அதில், “அதிமுகவில் இரட்டை இலையில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன்.

என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு, எவரவர் கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்கிறேன்.

இந்தப் பேச்சால், என் மேல் வழக்கு கொடுத்தாலும் பிரச்னை இல்லை. ஏனென்றால், போன உள்ளாட்சித் தேர்தலின்போது, என்மேலுள்ள வழக்கு, தேர்தலையே பார்க்கவிடவில்லை. அது ஒன்னும் பிரச்சினையில்லை. இரட்டை இலையில் ஜெயிச்சுட்டு கட்சி மாறி போனால், உங்க வீட்டில் வாய்க்கரிசி வாங்கிட்டு போங்க” என வகைதொகையில்லாமல் பேசினார்.

மிரட்டல் பேச்சு

சண்முக கனியின் இந்த மிரட்டல் பேச்சு, விருதுநகர் மாவட்டத்தில் வீடியோ பதிவாக சுற்றி வருகிறது. இவர் பேசிய இந்தப் பேச்சு அதிமுக நிர்வாகிகள் மட்டுமில்லாமல் அரசியல் ஈடுபடும் அனைவர் இடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துக்கள் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.