விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் ஆயிரத்து இருபது பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர், அவரது ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் மூவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தற்போது அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோழிக்கறி வாங்கினால் மாஸ்க் இலவசம் - கறிக்கடைகாரரின் பலே ஐடியா!