விழுப்புரம் அருகேயுள்ள கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (88). இவர் தன்னிடம் உள்ள சொத்துகளை பிள்ளைகள் அபகரித்துவிட்டு தன்னை கவனிக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (அக்.12) மனு அளிக்க வந்தார்.
தள்ளாத வயதில் மூன்று சக்கர வண்டியில் உதவியாளர் ஒருவருடன் வந்த அவரது நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, உடனடியாக அந்த முதியவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவரை உடன் அனுப்பி வைத்து, முதியவரின் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும்படி அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் மனு அளிக்க வந்த பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.