ETV Bharat / state

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! - டிஜிபி சைலேந்திர பாபு

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

அன்பு ஜோதி ஆசிரமம்
அன்பு ஜோதி ஆசிரமம்
author img

By

Published : Feb 18, 2023, 10:31 AM IST

Updated : Feb 18, 2023, 11:25 AM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்டுவதாகவும் பல புகார்கள் வந்தது. இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகள் மற்றும் கெடார் போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தி 46 பெண்கள் உட்பட 167 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட பெண்களில் சிலர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்களை அளித்தனர். அதன் பேரில் விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட ஒன்பது பேரை கெடார் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்கள் பாலியல் தொந்தரவு போன்ற பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்ததாக புகார்கள் காவல்துறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பெண்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். வரும் நாட்களில் சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கின் விவரங்கள் அனைத்தையும் பெற்று அவர்கள் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்!

Last Updated : Feb 18, 2023, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.