2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் தடையை மீறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இதையடுத்து காவல் துறையினரின் உதயநிதியை கைதுசெய்தனர். இந்நிலையில் உதயநிதி கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் க. பொன்முடி தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர், காந்திசிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்முடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை காவல் துறையின் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை' - அமைச்சர் ஜெயக்குமார்