விழுப்புரம்: நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும், நடிகர் விஜயின் நடிப்பில் வாரிசு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் துணிவு முதல் காட்சி அதிகாலை ஒரு மணிக்கும், வாரிசு முதல் காட்சி காலை நான்கு மணிக்கும் திரையிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (ஜன.8) முதல் தொடங்கியது.
இந்த டிக்கெட் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் திண்டிவனத்தில் உள்ள தனியார் திரையங்கில் துணிவு படத்துக்கான முதல் காட்சி டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு பதில், ரூ.500 ரூபாயில் இருந்து ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள், சம்பந்தப்பட்ட திரையங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து ரோசனை போலீசார் திரையரங்கிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் திரையரங்கு நிர்வாகத்தை போலீசார் எச்சரித்தனர்.
இதையடுத்து அச்சிடப்பட்ட விலைக்கு மேல் வாங்கிய தொகையை தியேட்டர் நிர்வாகம் திருப்பி தந்தது. பின்னர் திரையரங்கை முற்றுகையிட்ட அஜித் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'கடைசி விவசாயி ரூ.30 கோடி கூட வசூலிக்க வில்லை' - மிஷ்கின் வேதனை!