ETV Bharat / state

கிரிப்டோகரன்சியில் லாபம் பார்க்கலாம்.. ரூ.3.13 லட்சம் இழந்த பொறியாளர்.. - crypto currency

விழுப்புரம் அருகே கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்றுக்கூறி பொறியாளரிடம் ரூ.3.13 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்யக்கூறி 3.13 லட்சம் மோசடி

author img

By

Published : Jan 27, 2023, 8:02 AM IST

Updated : Jan 27, 2023, 8:36 AM IST

விழுப்புரம் மாவட்டம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள பெருமாள்சாமி வீதியில் வசித்து வருபவர் கு.ஜோதிகுமாா் (52). பொறியாளரான இவரின் தொலைபேசிக்கு ஜனவரி 15 ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிா்முனையில் பேசிய நபா், தான் தனியாா் நிறுவனம் மூலம் தங்களை தொடர்பு கொண்டதாகவும், நீங்கள் ரூ. 1,750 ரூபாயை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், ஒரே நாளில் ரூ.3 ஆயிரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அதனை நம்பிய ஜோதிகுமாா் அவா் கொடுத்த எண்ணுக்கு ரூ.15 ஆயிரம் இணையவழியில் செலுத்தியுள்ளாா். அதன் பின்னர் பின்னா் லாபத் தொகையுடன் சேர்த்து பின்னா் ரூ .17,600 கிடைத்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து மேலும் அந்த நபரின் தூண்டுதலின் பேரில், அவர் கொடுத்த எண்ணுக்கு முறையே 2.23 லட்சம் ரூபாய் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரம் ரூபாயையும் ஜனவரி 19 ஆம் தேதிக்குள், 3 நாட்களில் அனுப்பி வைத்துள்ளாா்.

அதன் பின் அந்த நபரைத் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது, அந்த நபர் ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிக்குமார் காவல்துறையை நாடியுள்ளார். ஜோதிகுமாா் அளித்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பணமோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

இதையும் படிங்க: வருவாயை விட 750% அதிகம் சொத்து சேர்த்த ஓய்வு பெற்ற காவலர் மீது வழக்கு!

Last Updated : Jan 27, 2023, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.