ETV Bharat / state

நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கு அனுமதி! அமைச்சர் சி.வி.சண்முகம் - viluppuram new court building open

விழுப்புரம்: 3 ஆயிரத்து 900 நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

ministr c.v.shanmugam
author img

By

Published : Nov 24, 2019, 3:37 AM IST

விழுப்புரத்தில் ரூ.23.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் நீதிமன்ற கட்டங்களை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். ரமேஷ், ஆர்.சுப்பையா ஆகியோர் திறந்து வைத்தனர்.

புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் நீதிமன்றம்
புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் நீதிமன்றம்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது. நீதித்துறையின் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தற்போது நீதித்துறையின் வளர்ச்சிக்காக . 1,800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் புதிய நீதிமன்ற கட்டடம்

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம் கட்டி தரப்பட்டுள்ளது. சொந்த கட்டங்களில் நீதிமன்றங்கள் இயங்கும் ஒரே மாவட்டம் விழுப்புரம் மட்டுமே.

சிறிய வழக்குகளை விசாரிக்க தமிழ்நாட்டில் 59 தாலுகாக்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 900 நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் 2019 வரை 440 புதிய நீதிமன்றங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

Intro:விழுப்புரம்: 3,900 நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

Body:விழுப்புரத்தில் ரூபாய் 23.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் நீதிமன்ற கட்டங்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். ரமேஷ், ஆர்.சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு இன்று திறந்து வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்.,

"தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது.

நீதித்துறையின் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011 முதல் தற்போது நீதித்துறையின் வளர்ச்சிக்காக ரூ. 1,800 கோடி செலவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம் கட்டி தரப்பட்டுள்ளது. சொந்த கட்டங்களில் நீதிமன்றங்கள் இயங்கும் ஒரே மாவட்டம் விழுப்புரம் மட்டுமே.

சிறிய வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் 59 தாலுகாக்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3,900 நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Conclusion:தமிழகத்தில் கடந்த 2011 முதல் 19 வரையிலான காலகட்டங்களில் 440 புதிய நீதிமன்றங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளன" என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.