ETV Bharat / state

கரும்பு ஏற்றிவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து; ரயில்வே கேட் அருகே சம்பவம்! - tractor accident

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிராக்டர்
டிராக்டர்
author img

By

Published : Dec 17, 2019, 5:25 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஆலம்பாடியில் இருந்து கிழத்தாழனூர் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அதிக பாரத்துடன் சென்றுகொண்டிருந்த இந்த டிராக்டரானது, அரகண்டநல்லூர் ரயில்வே கேட் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென கவிழ்ந்தது.

ரயில்வே கேட் மிகவும் தாழ்வாக இருந்த நிலையில், அதீத எடையினால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாகத் தெரிகிறது. மேலும், டிராக்டரின் முன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றுவதற்காக சாலையிலேயே வாகனத்தை நிறுத்தியதாகவும், அப்போது பேருந்தின் மீது மோதிவிடாமல் இருக்க டிராக்டரை திருப்ப முயன்றபோது இந்த விபத்து நேர்ந்ததாகவும் அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர்.

டிராக்டர் விபத்து

இந்த விபத்தினால் திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அரகண்டநல்லூர் காவல் துறையினர் போக்குவரத்தை சரிசெய்தனர். ரயில்வே கேட் ஏறி இறங்கும் சாலையானது மிகவும் மேடாக உள்ள காரணத்தால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதில் கரும்பு டிராக்டரின் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதையும் படிங்க: விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் ஓட்டிய சிறுவன் !

Intro:tn_vpm_02_thirukovilur_tractor_accident_vis_tn10026Body:tn_vpm_02_thirukovilur_tractor_accident_vis_tn10026Conclusion:கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் இரயில்வே கேட் அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை சுமார் 5 மணியளவில் ஆலம்பாடியில் இருந்து கிழத்தாழனூர் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அதிகபாரத்துடன் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று புறப்பட்டது. டிராக்டரானது அரகண்டநல்லூர் இரயில்வே கேட்டை கடந்து ஏறி இறங்கி உள்ளது. தாழ்வான பாகுதியில் டிராக்டர் இறங்கி கொண்டிருந்த போது, முன்னே சென்ற தனியார் பேருந்து பயணிகளை ஏற்ற வாகனத்தை சாலையிலேயே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த கரும்பு டிராக்டரின் ஓட்டுனர் வேகத்தை குறைக்க முடியாமல், பேருந்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்பியுள்ளார். வேகம் மற்றும் அதிகபாரத்தினால் டிராக்டர் சாலையின் ஓரத்திலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தினால் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அரகண்டநல்லூர் காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்தனர். இரயில்வே கேட் ஏறி இறங்கும் சாலையானது மிகவும் மேடாக உள்ள காரணத்தால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதில் கரும்பு டிராக்டரின் ஓட்டுனர் சிரிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.