விழுப்புரம் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 84வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதனையொட்டி திண்டிவனம் அருகே உள்ள தனது பூர்வீக கிராமமான கீழ்விசிறிக்கு சென்றார்.
84 அடி உயர கொடிக்கம்பத்தில் பாமக கொடியை ஏற்றி தனது சொந்த கிராம மக்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் பூர்வீக இல்லத்தில் பெற்றோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது தன்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும் தொண்டர்களிடையே தன் தாயின் நினைவுகளை குறித்து உரையாடும் போது,
"என்ன தவம் செய்தேனோ,
நான் என்ன தவம் செய்தேனோ,
எழு பிறப்பும் உன் வயிற்றில் நான் பிறக்க அருள் புரிவாய்"
என கண்ணீர் மல்க தெரிவித்தார். பின்னர் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : 44th Chess Olympiad : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு