ETV Bharat / state

தேச துரோக வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்! - vilupuram

விழுப்புரம்: பல்வேறு துறைகளைச் சேர்ந்த சமூக அக்கறை கொண்ட 49 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அரசைக் கண்டித்து உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
author img

By

Published : Oct 9, 2019, 7:37 AM IST

நாட்டில் மாட்டிறைச்சி என்ற பெயரில் பட்டியலின, சிறுபான்மையினர் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், திரைத் துறையினர் என பல்வேறு துறைகளைச் சார்ந்த சமூக அக்கறை உடைய 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியதற்காக அவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்தச் செயலுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், அவர்கள் மீது பதிவு செய்த தேச துரோக வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நகர செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

இதில் மாநில செயலாளர் பால சந்திரபோஸ், மாவட்ட தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ரஃபேல் பயணம் சூப்பர் - ராஜ்நாத் சிங்

Intro:tn_vpm_02_bjp_party_agniest_letter_pettisan_vis_tn10026Body:tn_vpm_02_bjp_party_agniest_letter_pettisan_vis_tn10026Conclusion:உளுந்தூர்பேட்டையில் பல்வேறு துறையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 49 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்த பஜக அரசசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் !!

நாட்டில் மாட்டுக்கறி என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், திரைத்துறையினர் பல்வேறு துறையைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியதற்க்காக திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உட்பட நாற்பத்தி ஒன்பது பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 49 பேர் மீது வழக்கு பதிவுசெய்ததை கண்டித்தும், அவர்கள் மீது பதிவு செய்த தேச துரோக வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி நகர செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் பால சந்திரபோஸ்,மாவட்ட தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.