கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு தரப்பிலும் உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை சந்தித்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று கடிதம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அரங்கம் மற்றும் தளபதி அரங்கை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களை தங்கவைக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்துள்ளோம். தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். மாவட்ட ஆட்சியரும் தேவைப்பட்டால் கலைஞர் அறிவாலயத்தை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 21 பேர் மும்பையில் உணவின்றி தவித்துவருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: