விழுப்புரம்: விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி காலை விழுப்புரம் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மழை காரணமாக அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டக் கூட்டம் வரும் 14.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண அரங்கில் நடைபெறும் என்று தலைமைக் கழகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
10.12.2021 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள பாப்பாத்தி அம்மாள் திருமண அரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்தத் தகவல்கள் பா.ம.க தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டங்கள் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடக்கிறது.