விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தீர்த்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 50). மாற்றுத் திறனாளியான இவர், அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (மே 18) இரவு செங்குட்டுவன் தனது நண்பர் சதீஷ் உள்பட மூவருடன் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது போதை தலைக்கேறிய நிலையில், இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரம் அடைந்த சதீஷ் உள்பட அனைவரும் செங்குட்டுவனை தாக்கியுள்ளனர். இதில் செங்குட்டுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, திண்டிவனம் காவல் நிலையத்தில் சதீஷ் சரணடைந்துள்ளார். மற்ற இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்த தொழிலாளர்கள்!