ETV Bharat / state

‘சிறுமி கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும்’ - எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தல்!

விழுப்புரம்: சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சிறுமி கொலை குறித்து பேசிய எம்.பி ரவிக்குமார்

author img

By

Published : May 11, 2020, 3:03 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேு உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஶ்ரீ (15). அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயஶ்ரீயை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களான முருகன், கலியபெருமாள் ஆகியோர் இணைந்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயஶ்ரீ இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரழந்தார்.

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளாக கருதி, நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

  • “விழுப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை உயிரோடு எரித்துப் படுகொலை செய்தவர்களை பயங்கரவாதிகளாகக் கருதி அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிட மக்கள்மீது அதிகரித்துவரும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தி, சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்” pic.twitter.com/sSvlECBQp9

    — Dr Ravikumar M P (@WriterRavikumar) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.