விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சியின் ஒன்றிய அலுவலகம் மற்றும் கூட்டரங்கை இன்று (நவ.8) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.
அச்சமயம் வல்லம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் அமுதா ரவிக்குமாரை அழைத்து கூட்டரங்கில் இருந்த இருக்கையில் அமர வைத்து இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையுடன் இருந்து, சமத்துவத்தைப் பேணி காக்கவேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தினார்.
அமைச்சரின் இந்நடவடிக்கையைக் கண்ட அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியுடன் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கருணை அடிப்படையில் பணி.. அரசு விடுத்த வார்னிங்!