விழுப்புரம்: செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மகாளய அமாவாசையான இன்று மேல்மலையனூர் மூலவர் அங்காளம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனை துர்காதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அங்காளம்மனை ஊஞ்சலில் அமரவைத்த பூசாரிகள் தாலாட்டு பாடல்களைப் பாடினர்.
ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் கரோனா தொற்று காரணமாக எளிய முறையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர் 1 மணிநேரத்தில் ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் கறார்