ETV Bharat / state

அளவுக்கதிகமாக ஏரியில் மண் அள்ளிய லாரிகள் சிறைப்பிடிப்பு

விழுப்புரம் அருகே அளவுக்கதிகமாக ஏரியில் மண் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

மண் அள்ளிய லாரிகள் சிறைப்பிடிப்பு
மண் அள்ளிய லாரிகள் சிறைப்பிடிப்பு
author img

By

Published : Dec 28, 2022, 12:50 PM IST

மண் அள்ளிய லாரிகள் சிறைப்பிடிப்பு

விழுப்புரம் புறவழிச் சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் ஏரியில் மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அரசு நிர்ணயித்துள்ள அளவைவிட அதிகமாக மண் அள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஏரியில் பெருமளவு பள்ளம் ஏற்படுவதால் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரில் சிலர் தவறி விழுந்து உயிரிழப்பு நேரிடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், சோழகனூர் ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் இன்று (டிச. 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 அடி வரை மட்டுமே மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் சுமார் 20 அடிக்கும் மேலாக மண் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போகும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் மங்காளியம்மன் திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.