விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மனைவி கங்கா (52). சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கங்கா மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.
அதன்பேரில், கங்காவை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!