விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே உள்ள அரும்புலி கிராமத்தில் வசித்துவருபவர் கருணாகரன். இவர் தனக்குச் சொந்தமான வீட்டுமனைப் பிரிவை அளந்து கொடுப்பதற்காக விக்கிரவாண்டி நில அளவைப் பிரிவுக்கு மனு அளித்திருந்தார்.
நிலத்தை அளப்பதற்காக, நில அளவையர் ஸ்ரீதேவி ரூ.7,000 கையூட்டு கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கருணாகரன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இதையடுத்து ஸ்ரீதேவியைப் பிடிப்பதற்காக, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கருணாகரனிடம் கொடுத்து ஸ்ரீதேவியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 16) ஸ்ரீதேவி கருணாகரனிடம் ரூ.7,000 கையூட்டு வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும் ஸ்ரீதேவிக்கு உதவியாக இருந்த அவரது கணவர் வெற்றிவேலுவையும் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: பனியன் நிறுவன உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கிய கும்பல்