விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொண்டர்களிடையே உயர் கல்வித்துறை அமைச்சர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுயதாவது, “நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவன். அன்றைய காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய மாணவர்களால் தான் இன்று வரை தமிழகத்தில் இந்தியை அவர்களால் திணிக்க முடியவில்லை. தொண்டர்களாகிய நீங்கள் இந்தி திணிப்பு பற்றிய விழிப்புணர்வை தமிழக இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
தமிழும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுமே நமக்கு போதுமானது. ஆங்கிலம் படித்தால் அண்டை நாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் வேலைவாய்ப்பு பெறலாம். அண்டை மாநிலங்களில் செல்லும் பொழுது தேவைக்கேற்ப அவர்களின் மொழியை கற்கலாம். அன்றைய காலகட்டத்தில் இந்தி திணிப்பு கட்டாயமாக்கப்படுவதை உணர்ந்த அறிஞர் அண்ணா ரு மொழிக் கொள்கை திட்டத்தை கொண்டு வந்தார் தமிழும் ஆங்கிலம் மட்டுமே போதுமானது என்று இரு மொழிக் கொள்கையை கொண்டு வந்தார்.
ஆனால் இன்றைய மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்கிற தோணியில் மும்மொழி கொள்கை என்று தமிழக மாணவர்களிடையே தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியும் பயில வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. ஏன் மும்மொழி கொள்கையில் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளை புகுத்த கூடாதா? ஏன் மும் மொழிக் கொள்கையிலும் இந்தியை திணிக்கப்பார்க்கிறது.
தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றுடன் மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்த மொழிகளை படிக்கலாம். ஆனால் இந்தி படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது” என்றார்.
இந்தி திணிப்புக்கு எதிராக அண்ணாவின் நகைச்சுவையான புனைக்கதையை எடுத்துக் காட்டாக கூறிய அமைச்சர் பொன்முடி, “ஒரு வீட்டில் ஒரு பெரிய ஓட்டையும் ஒரு சிறிய ஓட்டையும் வீட்டின் முதலாளி போட்டிருந்தார். இதனைப் பார்த்து ஏன் இரண்டு ஓட்டைகள் போட்டுள்ளாய் என கேட்டதற்கு. ஒன்று பூனை செல்வதற்கும். மற்றொன்று எலி செல்வதற்கும் என்று விளக்கம் கூறியுள்ளார்.
அதற்கு கேள்வி கேட்டவர் பூனை செல்லும் ஓட்டையில் எலி செல்லாதா என்பதைப் போன்று, மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளை தேர்வு செய்து பயிலலாம்” என நகைச்சுவையாக தொண்டர்களிடையே உரையாற்றினார்.
இதையும் படிங்க: 'தமிழக அரசை கண்டாலே மத்திய அரசுக்கு கசப்பு' - எம்பி ஆ.ராசா விளாசல்!