ETV Bharat / state

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! - நீரில் மூழ்கிய தரைப்பாலம்! - நீரில் மூழ்கிய தரைப்பாலம்

விழுப்புரம்: தொடர்மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

flood
flood
author img

By

Published : Dec 18, 2020, 9:14 AM IST

விழுப்புரம் மாவட்டம் கானை - அகரம் சித்தாமூர் இடையே பம்பை ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பாலத்தின் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அகரம் சித்தாமூர், வெங்கந்தூர், சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், விழுப்புரம் வழியாக 20 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு பம்பை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கு குவிந்து வருகின்றனர்.

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! - நீரில் மூழ்கிய தரைப்பாலம்!

பெருமழை வெள்ளக் காலங்களில் பம்பை ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கின்ற சூழலில், தண்ணீர் வீணாகாமல் இருக்க பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, குப்பம் பொதுப்பணித்துறை ஏரிக்கு தண்ணீரை மடைமாற்றினால், விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே, சுற்றுவட்டார கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

இதையும் படிங்க: சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கப்பல் போல் மிதந்த கார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.