ETV Bharat / state

இருளர் பெண்கள் பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரியின் ஜாமீன் மறுப்பு - இன்ஸ்பெக்டர்

இருளர் இன பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரியின் ஜாமீன் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

irula women  Ex police officer bail denied  rape case  irula women rape case  villupuam news  villupuram latest news  பாலியல் வழக்கு  இருளர் பெண்கள்  இருளர் பெண்கள் பாலியல் வழக்கு  ஜாமீன் மறுப்பு  போலீஸ் அதிகாரியின் ஜாமீன் மறுப்பு  பாலியல் வன்கொடுமை  இன்ஸ்பெக்டர்  தள்ளுபடி
போலீஸ் அதிகாரியின் ஜாமீன் மறுப்பு
author img

By

Published : Nov 24, 2022, 11:36 AM IST

விழுப்புரம்: திருக்கோவிலூர் தாலுகா பகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட 4 பெண்களை விசாரணைக்காக திருக்கோவிலூர் காவல் நிலையம் அழைத்துச்சென்று அங்கு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய திருக்கோவிலூர் காவல் துறை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்ளிட்ட 5 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி.வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கடந்த 14ஆம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் சரணடைந்து ஜாமீன் மீதான மனுவை சமர்ப்பித்தார், அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 4 பேர் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்ட நிலையில் இவ்வழக்கில் முதல் குற்றவாளியான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் மட்டும் தொடர்ந்து ஜாமீன் பெறமால் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி இன்ஸ்பெக்டர் சீனிவாசன், 2ஆவது முறையாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து அந்த மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தல்லாகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பை தற்போது அகற்றுவது சாத்தியமில்லை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.