விழுப்புரத்தில் நேற்று (மே 14) செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், "தமிழ்நாட்டில் தற்பொழுது அரசியல் சூழ்நிலை மாறி வருகிறது. ஆன்மீகத்தின் பக்கம் வெற்றி தேடி வருகிறது. திராவிட மாடல் என்பது ஆன்மீகத்தை ஒருபோதும் புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டில் வளர முடியாது. திருவாரூர் ரதவீதி நடைபெறும் பகுதிக்கு கருணாநிதி பெயரை சூட்ட கூடாது. வேறு எங்காவது பெயரை அரசு சூட்டிக் கொள்ளட்டும்.
வள்ளலாரின் சீடராக கருதப்படும் ஓமாந்தூராரின் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலையை வைக்க வேண்டாம். தமிழ்நாட்டில் அண்ணாமலையின் வருகைக்கு பிறகே மாநில பாஜக எழுச்சி பெற்றுள்ளது. தமிழ்நாடு பாஜக தற்போது புலிப்பாய்ச்சலை போன்று உள்ளது. திமுக, அதிமுக என்பது மாறிவிட்டது. தற்போது திராவிடமா, ஆன்மிகமா என்பதை நோக்கி தமிழ்நாடு செல்கிறது" என்றார்.
இதையும் படிங்க:'தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு விதித்த தடையை திரும்ப பெறுக' - அர்ஜூன் சம்பத் பேட்டி