வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியில் கரையைக் கடந்ததையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனமழையால் பாதிக்கப்பட்ட வாணியம்பாளையம், மழவராயனூர், புருசானூர் ஆகிய பகுதிகளை, திமுக துணைப்பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன்முடி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது தொடர்புடைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உடனடியாக மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பொன்முடி வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது மாவட்ட திமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி மறியல் போராட்டம்