விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரன் எழுதிய மந்திர கணங்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்புரையாற்றினார்.
அதன்பின், கல்லூரி வளாகத்தில் வந்து கொண்டிருந்தபொழுது அமைச்சரை மறித்து மாவட்ட பிரதிநிதி வீடூர் ஜெயராமன், தனது பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பிரகாஷ் தன் மீதும், தனது மகன் மீதும் போலீசில் தேவையற்ற பொய் வழக்குகளை பதியுமாறு போலீசிடம் கூறியுள்ளார்.
அதற்கு ஆதரவாக விக்கிரவாண்டி ஆய்வாளர் தன் மீது முதல்நிலை அறிக்கை பதிவு செய்து, தன்னை தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர். போலீசாரிடம் கேட்டால் அமைச்சரும், அவருடைய மருமகனும்தான் உன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுகின்றனர் என கூறுவதாக அமைச்சரிடமே முறையிட்டார்.
-
விழுப்புரம் மாவட்டம் - மயிலம் ஸ்ரீ மத் சிவஞான சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரியில் மலேசியா எழுத்தாளர் திரு. பெ. இராஜேந்திரன் அவர்களின் எழுதிய "மந்திரக் கணங்கள் நூல் வெளியிட்டு விழாவில்" கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை நான் வெளியிட மயிலம் பொம்பூர ஆதினம் அவர்கள்… pic.twitter.com/8P6G60qig6
— Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) (@GingeeMasthan) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">விழுப்புரம் மாவட்டம் - மயிலம் ஸ்ரீ மத் சிவஞான சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரியில் மலேசியா எழுத்தாளர் திரு. பெ. இராஜேந்திரன் அவர்களின் எழுதிய "மந்திரக் கணங்கள் நூல் வெளியிட்டு விழாவில்" கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை நான் வெளியிட மயிலம் பொம்பூர ஆதினம் அவர்கள்… pic.twitter.com/8P6G60qig6
— Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) (@GingeeMasthan) November 6, 2023விழுப்புரம் மாவட்டம் - மயிலம் ஸ்ரீ மத் சிவஞான சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரியில் மலேசியா எழுத்தாளர் திரு. பெ. இராஜேந்திரன் அவர்களின் எழுதிய "மந்திரக் கணங்கள் நூல் வெளியிட்டு விழாவில்" கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை நான் வெளியிட மயிலம் பொம்பூர ஆதினம் அவர்கள்… pic.twitter.com/8P6G60qig6
— Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) (@GingeeMasthan) November 6, 2023
அப்போது, வீடுர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பிரகாஷ் வந்தார். உடனே பிரகாஷைப் பார்த்த ஜெயராமன் ஆத்திரமடைந்து, தனது ஆதரவாளர்களை பிரகாஷை தாக்குமாறு சத்தம் போட்டதாகத் தெரிகிறது. பிரகாஷை தாக்குவதற்கு ஓடி வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அந்த இடத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மயிலம் பொம்மபுர ஆதீனம் வேகமாக ஓடி வந்து ஜெயராமனை சமாதானப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் தரப்பும், ஜெயராமனை அழைத்து சமாதானப்படுத்த முயற்சித்தது.
இருப்பினும், தீபாவளிக்குள் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால், வீடூரில் தேவையற்ற பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என அமைச்சரிடத்தில் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதையும் படிங்க:பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கிய கோவில்பட்டி கண் தானம் இயக்கம்!