விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை 159 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று கோயம்பேடு சந்தைக்குச் சென்று வந்த தொழிலாளர்கள் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 243 காவலர்கள் விழுப்புரம் அடுத்த காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த மூன்று தினங்களாக பயிற்சி பெற்று வந்தனர். இவர்களில் 63 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆறு பேருக்கு தொற்று இருப்பது இன்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பயிற்சி காவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சி காவலர்களின் எண்ணிக்கை உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: