ETV Bharat / state

காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ் - மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள் - KANJA

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பறிமுதல்
author img

By

Published : Jul 20, 2019, 9:47 AM IST

Updated : Jul 20, 2019, 10:08 AM IST

திண்டுக்கல் ஆர்எம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், பிரபு ஆகியோர் சென்னையிலுள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் வாடகைக்கு கார் எடுத்துள்ளனர். இருவரிடமும் முறையான ஓட்டுநர் உரிமம், முகவரிச் சான்றுகள், வைப்புத் தொகையை பெற்றுக்கொண்டு நிறுவனத்தினர் காரை ஒப்படைத்துள்ளனர். வெகு நேரமாகியும் காரை ஒப்படைக்காததால் சந்தேகமடைந்த டிராவல்ஸ் நிறுவனத்தினர், காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி கொண்டு அவர்கள் சென்ற பகுதிகளை சோதனையிட்டனர். அதில் சகோதரர்கள் இருவரும் ஆந்திரா சென்று மீண்டும் சென்னை திரும்பியது தெரியவந்தள்ளது. சென்னையில் காரை ஒப்படைக்காததால் காரில் ஏதாவது கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தில் கார் நிறுவனம் சார்பில் மாநகர காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.

விழுப்புரம்
கஞ்சா பறிமுதல்

இதைத்தொடர்ந்து, மாநகரக் காவல்துறையினர் செங்கல்பட்டு, விழுப்புரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வதை அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்த காரை நிறுத்து சோதனை செய்தனர். அதில் 1.5 கிலோகிராம் எடை கொண்ட 64 பாக்கெட்டுகளில், 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்
கஞ்சா பறிமுதல்

ஆந்திர, தமிழக காவல்துறையினர் காரை சோதனை செய்ய முயற்சிக்கக் கூடாது என்பதற்காக கண்ணாடியில் வழக்கறிஞர் என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கரை ஒட்டி காரை இயக்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.Body:விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே தலைமை காவலர்கள் பழனியாபிள்ளை, அய்யாதுரை மற்றும் காவலர்கள் ராஜி, முருகவேல், பிரசாந்த் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கிடமாக வந்த
PY-01-CD-8826 பதிவு எண் கொண்ட ஷிப்ட் டிசையர் நான்கு சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய சோதனையில் அந்த வாகனத்தில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 1.5 கிலோகிராம் எடை கொண்ட 64 பாக்கெட்டுகளில் மொத்தம் 100 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

Conclusion:இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக, திண்டுக்கல் RM நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பிரபு ஆகிய இருவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Last Updated : Jul 20, 2019, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.