ETV Bharat / state

தமிழ் மாடலா... திராவிட மாடலா... பொன்முடியின் விவாதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழ் மாடலா அல்லது திராவிட மாடலா என விவாதத்திற்கு அழைத்த பொன்முடியிடம் விவாதிக்கத் தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ் மாடலா திராவிட மாடலா பொன்முடியின் விவாதத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில்

author img

By

Published : Sep 25, 2022, 2:47 PM IST

விழுப்புரம்: பாஜகவின் 8 ஆண்டுகள் சாதனை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை குறித்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது, ''ஆளுநர் என்ன கருத்து தெரிவித்தாலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து. பாஜக தலைவர் என்ற முறையில் மட்டுமே நான் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். திமுக கடந்த13 மாதங்களில் ஊழல் அரசு என்று பெயர் வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் பெருமளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல சமூக ஆர்வலர்கள் அமைதியாகிவிட்டனர். இந்தியாவில் காப்பர் விலை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. தற்போது சீனாவில் இருந்து இருக்குமதி செய்யும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.

பாஜக தமிழ் மாடலா, திராவிட மாடலா என்பது குறித்து விவாதிக்கத் தயாராக உள்ளோம். திராவிடம் என்ன என்பது குறித்தும், 70 ஆண்டுகளாக திமுகவின் சாதனையினை திராவிட மாடல் எனக்கூறுகிறார்கள். அதுகுறித்தும் விவாதிக்க பாஜக தயாராக உள்ளோம். திமுகவின் ஊழல் குறித்தும் விவாதிக்கத் தயாராக உள்ளோம்.

தமிழ் மாடலா... திராவிட மாடலா... பொன்முடியின் விவாதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்

பொன்முடி கட்சித் தலைவர் இல்லை. இருப்பினும், பொன்முடி நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் விவாதிக்க பாஜக மாநில துணைத் தலைவர் ஒருவர் தயாராக உள்ளார். அதே போன்று திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது தயார் என்றாலும் நேரலையில் விவாதிக்கத் தயாராக உள்ளேன். பாஜக கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு, கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது பாஜக தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். காவல் துறை மீது நம்பிக்கை உள்ளது'',என்றார்.

இதையும் படிங்க: தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.