தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அலுவலர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் முறைகேடாக பணம் பெற்றவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பயன்பெறுவோர் பற்றிய கணக்கெடுப்பை நடத்தி, தகுதியுடைய நபர்களுக்கு உதவித்தொகை கிடைத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட பாஜகவினர் நேற்று (செப்டம்பர் 7) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பாஜக மாவட்ட தலைவர் குட்டியாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கலியவரதன் முன்னிலை வகித்தார்.