குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இச்சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் பேரணி நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் போராட்டங்களை கண்டித்து, அதனைத் தடைசெய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் பாஜக சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.டி.கலிவரதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய கரு.நாகராஜன், ”பாஜக தலைமை வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஏஏ போராட்டத்தில் வன்முறை எப்படி உருவாக்கப்படுகிறது? அது எப்படி திட்டமிட்ட வன்முறைக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறது? ஏதோ ஒரு நாள் அல்லது 2 நாள் போராட்டங்கள் என்றால் யதார்த்தமாக நடந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: விழுப்புரம் இளைஞர் கொலை: 7 பேர் கைது