ETV Bharat / state

நெருங்கும் தீபாவளி.. விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஆடுகள் விற்பனை அமோகம்!

Sales of Goats: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்டுச் சந்தைகளில், ஆடுகள் கோடிக்கணக்கில் அமோக விற்பனை செய்யப்பட்டது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஆடுகள் விற்பனை அமோகம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 5:25 PM IST

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டையில் நேற்று (நவ 8) நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. அதில் எறையூா், குன்னத்தூா், வடகுரும்பூா், விருகாவூா், பரிக்கல், பெரும்பாக்கம், சோந்தநாடு உள்ளிட்ட கிராமங்களைச் சோந்த விவசாயிகள், தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

அதனைத் தொடர்ந்து ஆடுகளை வாங்க சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திண்டுக்கல், கடலூா், பெரம்பலூா் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். செம்மறியாடு, வெள்ளாடு, நாட்டாடு ஆகியவை ரகத்துக்கேற்ப ரூ.8,000 முதல் ரூ.20,000 வரையிலான விலைக்கு விற்கப்பட்டன. மேலும், இங்கு சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சி, அவலூர்பேட்டையில் புதன்கிழமைகளில் நடைபெறும் வாரச் சந்தை பிரசித்தி பெற்ற ஒன்று. இங்கு அவலூர்பேட்டையைச் சுற்றியுள்ள எதப்பட்டு, மேல்வைலாமூா், மேல்மலையனூா், வளத்தி, செவலபுரை, வடபாலை தாயனூா் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்க அவலூா்பேட்டை வாரச் சந்தைக்கு வந்து செல்வா்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் புதிதாக 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டம்" - அமைச்சர் எ.வ.வேலு

இந்த கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளும் வாரச் சந்தையில் விற்பனை செய்யப்படும். இவற்றை விழுப்புரம் மட்டுமின்றி திருவண்ணாமலை, வேலூர், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, அவலூர்பேட்டை வாரச் சந்தைக்கு வழக்கத்துக்கு மாறாக ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால், சற்று தாமதமாக காலை 7 மணிக்கு சந்தையானது கூடியது. ஆடுகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

மாடுகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து, ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகின. வாரச் சந்தையில் சுமார் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் செல்லவும் வாரச் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவிய நீதிபதிகள்..! கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.